Type Here to Get Search Results !

விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த பெண் தொடர்பில் சற்றுமுன் வெளியான தகவல்

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் சவற்காலைக்கு அருகாமையில் இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.


தம்பிலுவில் மயானத்திற்கு அருகாமையில் நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் தம்பிலுவில்லை சேர்ந்த 24 வயதுடைய சுந்தரலிங்கம் அர்ச்சனா என்ற யுவதி உயிரிழந்துள்ளார். திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரைப்பற்று - பொத்துவில் தம்பிலுவில் பகுதியில் வீதியில் அக்கரைப்பற்று திசையிலிருந்து பொத்துவில் திசை நோக்கிச் பயணித்த கார் ஒன்று எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்துக்குப் பிறகு, காரை ஓட்டிச் சென்ற சாரதி காரை நிறுத்தாமல் ஓட்டிச் சென்று திருக்கோவில் - தம்பிலுவில் பகுதியில் காரை கைவிட்டு தப்பிச் சென்றுள்ளார். விபத்தில் மோட்டார் சைக்கிள் செலுத்துனர் மற்றும் பின்னால் அமர்ந்து சென்ற பெண்ணும் பலத்த காயமடைந்து, திருக்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பெண் உயிரிழந்தார். தப்பியோடிய காரின் சாரதியை கைது செய்ய திருக்கோவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Bottom Post Ad