கர்நாடக மாநிலம் பெங்களூருவின் மகாலட்சுமி லேஅவுட் பகுதியைச் சேர்ந்த 34 வயதான தொழிலதிபர் ராகேஷ் வைஷ்ணவ், தனது குழந்தைகள் படிக்கும் தனியார் பள்ளியில் வேலை செய்த 25 வயது ஆசிரியை ஸ்ரீதேவியுடன் உறவு ஏற்படுத்தி, அவரிடமிருந்து லட்சக்கணக்கான ரூபாய் பணம் பறித்ததாகக் கூறப்படுகிறது.
இதில் ஸ்ரீதேவியின் காதலன் சாகர் மற்றும் ரவுடி கணேஷ் ஆகியோரும் ஈடுபட்டுள்ளதாகவும், இவர்கள் மூவரும் ராகேஷை கடத்தி பணம் பறித்ததாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மத்திய குற்றப்பிரிவு போலீசார் இவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ராகேஷ் வைஷ்ணவ், திருமணமாகி மூன்று குழந்தைகளுக்கு தந்தையானவர். அவரது குழந்தைகள் ஸ்ரீதேவி பணியாற்றிய ஐஸ்கான் கோவில் அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தனது ஐந்து வயது குழந்தையை பள்ளியில் சேர்க்கச் சென்றபோது ராகேஷ், ஸ்ரீதேவியுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர், குழந்தைகளை பள்ளியில் இருந்து பிக்கப் செய்யச் செல்லும்போது அவளுடன் நெருக்கமாகப் பேசினார்.
இதற்காக ராகேஷ் தனி செல்போன் மற்றும் சிம் கார்டு வாங்கி ஸ்ரீதேவியுடன் தொடர்ந்து பேசி வந்ததாகத் தெரிகிறது.ஸ்ரீதேவி, தனது தந்தையின் உடல்நிலைக்காக 4 லட்சம் ரூபாய் கோரினாள். பின்னர், பள்ளியை மேம்படுத்துவதாகக் கூறி மேலும் பணம் பெற்றுக்கொண்டாள்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம், ராகேஷ் கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டபோது, ஸ்ரீதேவி "பணம் திருப்ப முடியாது, பள்ளியின் பங்குதாரராகச் சேருங்கள்" என்று கூறியதாக ராகேஷ் புகாரில் கூறியுள்ளார். பங்குதாரராகச் சேர்ந்த பிறகு, இருவருக்கும் இடையிலான நெருக்கம் அதிகரித்தது.
அடிக்கடி தனிமையில் உள்ளாசமாக இருந்ததாகவும், ராகேஷின் மனைவி இல்லாத நேரங்களில் ஸ்ரீதேவி அவரது வீட்டுக்கு வந்து, முத்தம் கொடுத்துவிட்டு ₹50,000 எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
பணத்தைத் திருப்பக் கேட்டபோது, ஸ்ரீதேவி "எல்லா பணமும் திருப்ப முடியாது, என்னுடன் உல்லாசமாக இருந்துக்கோங்க.." என்று ஹஸ்கி வாய்சில் பேசி ராகேஷை மயக்கிய ஸ்ரீதேவி.. அன்று இரவு தன்னுடைய வீட்டிற்கே அழைத்து ராகேஷிற்கு பணிவிடை செய்துள்ளார்.
தன்னுடன் உல்லாசமாக இருந்து விட்டு, மீண்டும் ராகேஷ் பணத்தை திருப்பி கேட்ட காரணத்தால் கடுப்பான ஸ்ரீதேவி ராகேஷின் மனைவியைத் தொடர்பு கொண்டு, "உங்கள் குழந்தைகளின் டிசியை (டிச்சர்ட் சான்டிஃபிகேட்) கொடுத்துவிடுகிறோம், உங்கள் கணவரை வந்து பெற்றுக்கொள்ளுங்கள்" என்று சொன்னாள்
இதனால் ராகேஷ் பள்ளிக்குச் சென்றபோது, ஸ்ரீதேவி, சாகர், கணேஷ் ஆகிய மூவரும் அவருடன் தனிமையில் இருந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை காட்டி, "இதை வெளியிடுவோம்" என்று மிரட்டி ஒரு கோடி ரூபாய் கேட்டனர்.
இதன் தொடர்ச்சியாக, கடந்த மாதம் 18-ஆம் தேதி, ஸ்ரீதேவி, சாகர், கணேஷ் ஆகியோர் ராகேஷை அவரது வீட்டிலிருந்து காரில் கடத்திச் சென்றனர். அவரிடமிருந்து ₹1,90,000 பறித்துவிட்டு, கோரைகுண்டே பாளையாவில் இறக்கிவிட்டு தப்பினர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, ராகேஷ் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். தலைமறைவாக இருந்த இவர்களை போலீசார் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.போலீசார், இந்தச் சம்பவத்தில் ஏமாற்று, அச்சுறுத்தல், கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளனர்.
ராகேஷ் கொடுத்த பணத்தின் மொத்தத் தொகை மற்றும் ஸ்ரீதேவியின் பள்ளி சம்பந்தப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்தும் விசாரணை நடக்கிறது. இந்தச் சம்பவம், பள்ளிகளில் நடக்கும் அநீதிகள் குறித்து பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
