முச்சக்கர வண்டி விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்ததுடன் இருவர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து இரத்தினபுரி, கொலன்ன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலிவாடிய பிரதேசத்தில் இடம்பெற்றது. வலக்கடை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று மரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது.
விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி மற்றும் பின் இருக்கையில் இருந்த இரண்டு பெண்கள் பலத்த காயமடைந்தனர். காயங்களக்குள்ளானவர்கள் கொலன்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சிகிச்சை பெற்று வந்த மற்றொரு பெண் மேலதிக சிகிச்சைகளுக்காக எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். விபத்தில் உயிரிழந்த பெண், உல்லிதுவாவ பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.
