திருகோணமலையில் குளத்துக்கு நீராடச் சென்ற பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி மரணம்!! திருகோணமலை - கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதவாச்சி குளத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி (15) மாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த பேமரத்னகே உமேஷ் ஆலோக (15வயது) எனவும் தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து தெரிய வருவது வழமையாக நண்பர்களுடன் குளிப்பதற்கு செல்வதாகவும் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் வீட்டிலிருந்து சென்றதாகவும் பின்னர் உயிரிழந்த நிலையில் நேற்றிரவு 8-15 மணியளவில் மீட்கப்பட்டதாகவும் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது. உயிரிழந்த மாணவன் கோமரங்கடவல -மதவாச்சி சிங்கள வித்தியாலயத்தில் 11ம் தரத்தில் கல்வி பயின்று வருபவர் எனவும் தெரியவந்துள்ளது.