திருமணமாகி ஒரு வருடமும் பூர்த்தியாகாத யாழ் ஏழாலையைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு!
கொழும்பு நோக்கிப் பயணித்த வான் விபத்துக்குள்ளானதில் யாழ்.ஏழாலை வடக்கைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருமணமாகி ஒரு வருடமும் பூர்த்தியாகாத நிலையிலேயே குறித்த துயரச் சம்பவம் நடந்துள்ளது.
கணவர் ஏழாலைப் பகுதியில் கிராம சேவையாளராக பணிபுரிந்து வருகின்றார்.
இன்று (16.10.2025) அதிகாலை இடம்பெற்ற மேற்படி சம்பவத்தில் 60 வயதான பெண்ணொருவரும் உயிரிழந்துள்ளதுடன் மேலும் எட்டுப் பேர் காயமடைந்துள்ளனர்.
யாழ்.ஏழாலை வடக்குப் பகுதியைச் சேர்ந்த திருமதி.அகிலன் திவ்யா (வயது31) என்ற இளம் குடும்பப் பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
ஆழ்ந்த அனுதாபங்கள் சகோதரி



