சூரியன் மறைந்த, மழைத்துளிகள் பெய்யத் தொடங்கிய அந்த ஞாயிற்றிரவு, ஏற்காட்டின் மலைப்பாதைகளை மட்டும் அல்ல, ஒரு குடும்பத்தின் வாழ்வையே முழுவதுமாக மூழ்கடித்தது. சேலம் மாவட்டம், கீரைக்காடு புத்தூர் அருகேயுள்ள மோட்டுக்காடு கிராமத்தின் அமைதியான வீதிகளில், 36 வயது சிவக்குமார், தன் இருசக்கர வாகனத்தில் பயணித்தார். அன்று பகலில் சேலத்தின் சந்தைகளைத் தொட்டு, குடும்பத்திற்கான மளிகைப் பொருட்களைப் வண்டியில் வைத்துக்கொண்டு, அவன் திரும்பினான். எலக்ட்ரிசியன் பணி செய்துகொண்டிருந்த அவன் குடும்பத்தின் தூணாக நின்றவன். இரண்டு மகன்களும், ஒரு மகளும், அவர்களின் சிரிப்புகளும் – அவனது உலகம். ஆனால், அந்த உலகத்தின் நிழலில், அவனுக்கு தெரியாத ரகசியம் ஒன்று தணிந்து கொண்டிருந்ததது.
மாராயி. 28 வயது. சிவக்குமாரின் மனைவி. அவளது கண்களில், கிராமத்தின் அமைதியை மீறி, ஏற்காடு அசம்பூரைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் சந்தோஷின் உருவம் படர்ந்திருந்தது. கடந்த சில ஆண்டுகளாக, அவர்களின் கள்ளக்காதல், ஊரெல்லாம் பேச்சுக்குரியதாக மாறியிருந்தது. சிவக்குமார் நம்பவில்லை. ஒரு நாள், எதேர்ச்சையாக மனைவிடம் சொல்லாமல் வீடு திரும்பிய போது, வீட்டுக்குள் முனகல் சத்தம்.. ஆம், மாராயியும், அவனது கள்ளக்காதலனும் மாறி மாறி உல்லாசம் அனுபவித்துக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ந்தார். கண் சிவன்தான். ஆனால், அவசரப்படவில்லை. விஷயத்தை பெரியவர்களிடம் கொண்டு சென்றான். குடும்பப் பஞ்சாயத்துகள், உள்ளூர் காவல் நிலையத்தில் பைசல், அவன் மனைவியைத் திருத்த முயன்றான். ஆனால், மாராயியின் மனதில், சந்தோஷின் உருவமே எதிரொலித்தன. "புருஷன் தடையாக இருக்கிறான். தீர்த்துகட்ட வேண்டும்," என்று அவள் முணுமுணுத்தாள்.
சந்தோஷ், அண்ணாமலை என்ற அவரது நண்பர் – அவர்களின் சதியின் முதல் அடுக்கு. ஆனால், அது போதவில்லை. பணம் பேசியது. வாழவந்தியைச் சேர்ந்த கூலிப்படையினர் தினேஷ், சக்திவேல் – 5 லட்ச ரூபாய் பேரம். முன்பணமாக 50 ஆயிரம். "சந்தேகம் வராதபடி. விபத்து போல சித்தரிச்சுடுங்க டா," என்று மாராயியின் கட்டளை. பதற்றத்தில் புதருக்குள், அந்த இரும்பு ராடு வீசப்பட்டது. சம்பவத்தை பார்த்த சாட்சி நான் தான் சிவகுமாரின் உடலின் அருகே புதருக்குள் பதுங்கியது அந்த இரும்பு ராடு. திட்டம் தீட்டியபடி, "இது விபத்து," என்று அவர்கள் நாடகம் ஆடினர். தப்பிச் சென்றனர். அடுத்த நாள் அதிகாலை, ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பேச்சு மூச்சில்லா உடல். தலையில் மட்டும் காயம். விபத்துக்கு எந்தத் தடயமும் இல்லை. போலீசார் விரைந்தனர். உறவினர்களுக்கு தகவல் பிறந்தது. ஊரில் சலசலப்பு, எங்கு திரும்பினாலும் சிவக்குமாரா.. என்ன ஆச்சு.. என பதற்றமான குரல்கள்.. ஆனால், இது விபத்தாக இருக்க முடியாது.. என பலரும் சந்தேகம் தெரிவித்தனர். காவல் துறையினரிடம், சிவகுமார் மனைவி "மாராயி தான் ஏதோ பண்ணிட்டா.." ஆம், கள்ளக்காதல். முந்தைய பஞ்சாயத்துகள். காவல் நிலையத்தில் வைத்து கூட பைசல் பண்ணிவிட்டீங்களே சார்.. என்று கதறல். மிரண்டு போனது காவல்துறை. விசாரணை தீவிரமானது. பிரேதப் பரிசோதனை உண்மையை வெளிப்படுத்தியது – இரும்பு ராடால் அடித்துள்ளது போன்ற காயம். சம்பவம் நடந்த இடத்துக்கு போலீசார் விரைந்தனர். அங்கிருந்த புதருகளை விலக்கி பார்த்தகாவலர் ஒருவரின் கைத்தடியிடம்.. நான் இருக்கேன்.. நான் தான் நடந்த சம்பவத்துக்கு சாட்சி..என்று இரும்பு ராடு பேசியது. சார்.. இங்க பாருங்க சார் என்று அலறினார் ஏட்டு. இன்று, சேலத்தின் அந்த மலைப்பாதைகள் மௌனமாகின. ஆனால், அந்த மழை இரவின் இருள், ஒரு குடும்பத்தின் வாழ்வை மட்டும் அல்ல, நம்பிக்கையின் அடித்தளத்தையும் உடைத்துவிட்டது.
கொலை, காதல், நாடகம் என இந்த கொடூரம் சினிமாவை மிஞ்சும் வகையில் உள்ளது. ஆனால், இது ஒரு உண்மை கதை.மாராயியை கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்த பிறகு, அங்கு இருந்த 52 வயதான பெண் ஒருவர் அடிப்பாவி மவளே.. உனக்கு தண்டனை கிடைக்கும் டி.. ஆனால், குழந்தைகளுக்கு, என்னடி கிடைக்கும். இவங்க பண்ணதுக்கான பாவத்தை அந்த குழந்தை அனுபவிக்கனுமே.. என வயிறு எரிந்து சொன்ன அந்த வார்த்தை ஏற்காட்டின் குளிரை வெப்பமாக்கியது.
