நெடுந்தீவைச் சேர்ந்த கில்மன் நோபட் தர்சிகாமேரி என்ற இளம் தாய் நேற்றையதினம் (ஒக். 09) இரவு யாழ் போதனா வைத்தியசாலையில் பிரசவத்தின் போது மரணமடைந்துள்ளதாக உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறப்புக்கான சரியான காரணம் , நேரம் என்பன வைத்தியசாலையில் தெரிவிக்கப்படாமையால் உடலத்தை ஏற்க உறவினர்கள் மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
