வெளிநாட்டு இளம் பெண் ஒருவர் உள்ளாடைக்குள் ஒழித்து வைத்து ஒருகிலோ தங்கத்தை டெல்லி விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தியா டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், உள்ளாடைக்குள் மறைத்து தங்க கட்டிகளைக் கடத்தி வர முயன்ற மியான்மர் நாட்டை சேர்ந்த இளம் பெண் பயணி ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அதிகாரிகள் கைப்பற்றிய தங்கக் கட்டிகளின் மொத்த எடை 997.5 கிராம் ஆகும். சுங்க இலாகா அந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த தங்கக் கடத்தல் தொடர்பாக அந்த பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அந்த தகவல்கள் கூறுகின்றன. மியான்மரின் யாங்கூன் நகரில் இருந்து டெல்லி விமான நிலையத்தை வந்தடைந்த விமானத்தில் வந்திறங்கிய பெண் பயணி ஒருவர், சுங்க வரி செலுத்த தேவையில்லாத வழியை பயன்படுத்தி சென்றபோது, அதிகாரிகளுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து பயணியை மறித்த சுங்க அதிகாரிகள், தனியிடத்துக்கு அழைத்து சென்று சோதனை நடத்தினர். சோதனையில் அவர் தனது உள்ளாடைக்குள் 6 தங்க கட்டிகளை தனித்தனியாக மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
