வீடு இல்லாத இலங்கை மக்களுக்கு சற்று முன் வெளியான மகிழ்ச்சித்தகவல்..!

 


நாட்டில் ஒன்பது இலட்சம் குடும்பங்கள் வசிப்பதற்கு சொந்த வீடுகளை எதிர்பார்த்து காத்திருப்பதாக தேசிய வீடமைப்பு மேம்பாட்டு அதிகாரசபை தெரிவித்துள்ளது. தேசிய வீடமைப்பு தினத்தை முன்னிட்டு சொந்த வீடுகளை எதிர்பார்த்து காத்திருக்கும் சுமார் ஆயிரத்து முந்நூறு குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்படும் என்று அதிகாரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார். நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் ஒரே நாளில் பொதுமக்களிடம் ஒப்படைக்கப்படுவது இதுவே முதல் முறை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த ஆண்டு, தேசிய வீடமைப்பு மேம்பாட்டு அதிகாரசபையின் உதவித் திட்டத்தின் கீழ் மூவாயிரத்துக்கும் (3000) மேற்பட்ட வீடுகள் கட்டி முடிக்கப்பட உள்ளன. மேலும் கடன் திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட இரண்டாயிரத்து ஐநூறு( 2500 ) வீடுகள் கட்டி முடிக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.



இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

1 கருத்து உள்ளது

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


  1. ரொம்ப சந்தோசமா இருக்கு நான் திருமணம் ஆனதில் இருந்து வாடகை வீட்டில் வசித்து வருகிறேன் 6 வருடமாக

    நீங்கள் வழங்கும் வீட்டில் எனக்கும் தருவீர்களா?

    இடம் அக்கறை பற்று

    தொலைபேசி இலக்கம் 0770104008

    நீங்கள் இது பற்றி விபரங்கள் தருவீர்களா நன்றி
Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post