வடக்கில் உள்ள அனைத்து பாடசாலைகளும் வழமை போல் இயங்கும் என ஆளுநர் செயலகம் தெரிவித்துள்ளது. இன்றைய தினம் பாடசாலை விடுமுறை தினமா என்று கேள்வி ஏற்பட்டுள்ள நிலையில் இது குறித்து வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தை தொடர்புகொண்டு வினவியவேளை, நாளையதினம் வடக்கில் உள்ள அனைத்து பாடசாலைகளும் வழமை போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி தினத்தை முன்னிட்டு பல பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது
