ஓட்டமாவடியில் மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் குடைசாய்ந்து விபத்து.!!
சாரதி காயங்களுடன் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதி
மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் ரக வாகனம் கொழும்பு வீதியில் வெலிகந்த பிரதேசத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதுடன், சாரதி காயங்களுடன் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த டிப்பர் வாகனம் ஓட்டமாவடி பிரதேசத்தைச்சேர்ந்த சீமெந்து முகவர் ஒருவருக்குச்சொந்தமானது என்பதுடன், வெலிகந்த பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
