உத்தர பிரதேசத்தின் காஸ்கஞ்ச் மாவட்டத்தில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... நாக்லா பார்சி கிராமத்தைச் சேர்ந்த பிரமோத் மற்றும் அவரது மனைவி ஷிவானி (20) 2018-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தனர். திருமண வாழ்க்கை ஆரம்பத்தில் அமைதியாக இருந்த நிலையில், சில மாதங்களாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்குக் காரணமாக, பிரமோத் தனது மாமியாரான ஷிவானியின் தாயாருடன் நெருங்கிய உறவு வைத்திருந்தது தெரியவந்தது. இருவரும் அடிக்கடி சந்தித்து பேசுவதோடு, தகாத உறவில் ஈடுபட்டதாக கிராமத்தில் பேசப்பட்டு வந்தது. இதை அறிந்த ஷிவானி மனஅழுத்தத்துக்குள்ளாகி, கணவருடன் பலமுறை இதைப் பற்றிய வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் பிரமோத் தனது மனைவியின் எதிர்ப்பை புறக்கணித்து மாமியாருடன் உறவைத் தொடர்ந்துள்ளார்...