அடை மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு. விவசாயமும் பாதிப்பு
நானுஓயா பகுதியில் இன்று பெய்துவரும் அடை மழையால் நானுஒயா கிரிமெட்டிய பகுதியில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் உட் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு பாதிக்கப்பட்டுள்ளது.
நானுஓயா கிரிமெட்டிய பகுதியில் அடிக்கடி மழை பெய்யும் போது இவ்வாறு வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுவதால் மக்கள் பெரும் அசௌகரிய நிலைமைக்கு முகம் கொடுத்துள்ளனர்.
இந்த விடயம் சம்பந்தமாக கடந்த காலங்களிலும் அதிகாரிகளுக்கு தெரிவித்த போதும் இதுவரை காலமும் எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு நுவரெலியா பிரதேசத்தை பொறுத்தவரையில் அடிக்கடி மழை பெய்யக்கூடிய ஒரு இடமாகும்.இருப்பினும் ஒவ்வொரு தடவையும் மழை பெய்யும் போது வெள்ளநீர் வீடுகள் உட்பகுதியில் மக்களின் உடைமைகளும் நாசமாகின்றது.
இதற்கு தீர்வு தான் என்ன என மக்கள் தமது விமர்சனத்தை தெரிவிக்கின்றனர்.



