சத்தமாக பாட்டுப் போட்ட 23 வயது பேரனை கத்தியால் குத்*திக் கொலை செய்த 76 வயது தாத்தா கேகாலை மாவட்டம் புலத்கொஹுபிட்டிய எதுராபொல ஐந்து ஏக்கர் கீழ் பிரிவு தோட்டதில் கொ*லைச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கேசட் இயந்திரம் சத்தமாக ஒலித்ததால் ஏற்பட்ட தகராறிலே குறித்த இளைஞன் குத்திக் கொல்லப்பட்டதாக புலத்கோஹுபிட்டிய போலீசார் தெரிவித்தனர் 76 வயதுடைய தாத்தா குடும்ப தகராறு காரணமாக நெருங்கிய உறவினரான 23 வயதான பேரன் முறையான மாயாகிருஷ்ணன் திலான் என்பவரை கூர்ந்த கத்தியால் குத்*தி கொ*லை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த இளைஞன் நேற்றைய தினம் ஹட்டனில் நடந்த கவணயீர்ப்பு போராட்டத்தில் மலையக மக்களுக்காக குரல் கொடுத்த இளைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
