மேலும் குறைந்த தங்கத்தின் விலை இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, தங்கத்தின் விலையானது கடந்த தினங்களுடன் ஒப்பிடுகையில் இன்று (01) சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனடிப்படையில், கொழும்பு செட்டியார் தெரு தங்க விலை நிலவரங்களின்படி, இதனடிப்படையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 318,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை, 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 294,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
