அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு வங்கிகளில் பணம் இன்று கிடைக்குமா?

 


அஸ்வெசும பயனாளிகளின் கொடுப்பனவு குறித்து அஸ்வெசும நலன்புரி நன்மைகள் சபை (Welfare Benefits Board) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அஸ்வெசும பயனாளிகளுக்கான நவம்பர் மாதத் தவணைக்கான பணம் இன்று (13.11.2025) அவர்களது வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய குடும்பங்களுக்கான கொடுப்பனவு நாளை அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும், 1,415,738 பயனாளிகளின் கணக்குகளுக்கு 11.2 பில்லியன் ரூபாய் மாற்றப்படும். இதேவேளை அஸ்வெசும கொடுப்பனவின் வருடாந்த தகவல் புதுப்பிப்பு தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அண்மையில் தெரிவித்திருந்தது. 2023 ஆம் ஆண்டில் அஸ்வெசுமவில் முதன் முறையாகப் பதிவு செய்து தற்போது கொடுப்பனவுகளைப் பெறும் மற்றும் பெறாத குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் இந்த புதுப்பிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த சபை குறிப்பிட்டுள்ளது. எனினும் 2024 ஆம் ஆண்டில் மனக்குறைகளை தெரிவித்த விண்ணப்பதாரர்கள் ஏற்கனவே தகவல் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளதால் அவர்கள் தகவல்களை புதுப்பிக்க வேண்டிய கட்டாயமில்லை என்றும் அந்த சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post