விண்ணப்பிக்க, கடவுச்சீட்டு, பல்கலைக்கழக ஏற்பு கடிதம், நிதிச் சான்று மற்றும் பிற துணை ஆவணங்கள் உட்பட தேவையான அனைத்து ஆவணங்களும் தேவை. விண்ணப்பங்களை ஒன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் உயிரியளவியல் (biometrics) சோதனை முடிவுகள் 14 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும். அனைத்து ஆவணங்களும் முழுமையாகவும் துல்லியமாகவும் இருப்பதை உறுதி செய்வது தாமதங்களை தவிர்க்க உதவுகிறது. இதேவேளை, பட்டப்படிப்புக்குப் பிறகு, மாணவர்கள் கனடாவில் பணிபுரிய முதுகலை பணி அனுமதிக்கு (PGWP) விண்ணப்பிக்கலாம். இந்த அனுபவம் பின்னர் நிரந்தர குடியிருப்புக்கு விண்ணப்பிக்க அவர்களுக்கு உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
