ஜோதிடத்தின்படி, நவகிரகங்களில் முதன்மையானவர் தான் குரு. தனுசு மற்றும் மீனம் ஆகிய ராசிகளுக்கு சொந்தக்காரர்கள் என போற்றப்படும் இவர், 365 நாட்களுக்கு ஒருமுறை தன்னுடைய ராசியை மாற்றுவார். இதன்படி, குரு பகவான் பிறக்கப்போகும் 2026 ஆம் ஆண்டில் தன்னுடைய ராசியை இரண்டு முறை மாற்றுவார் எனக் கூறப்படுகிறது. அதே சமயம் வழக்கமாக இரண்டு ராசிகளுக்கு சொந்தக்காரராக இருக்கும் குரு பகவான், புத்தாண்டில் ஒரே நேரத்தில் 3 ராசியில் பயணம் செய்வார். அப்படியாயின், குரு பகவான் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மிதுன ராசியிலும், ஜூன் 02 ஆம் தேதி மிதுன ராசியிலும், அதன் பின்னர் கடக ராசியிலும் பயணம் செய்வார். இதனை தொடர்ந்து அக்டோபர் 31 ஆம் தேதி கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு பயணம் செய்வார். இப்படி குரு பகவான் தன்னுடைய ராசியை இரண்டு முறை மாற்றுவதால் 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும். அந்த வகையில், புத்தாண்டில் குரு பெயர்ச்சியால் இதுவரையில் இல்லாத பணவரவை பார்க்கப்போகும் ராசிகள் யார் யார் என்பதை பதிவில் பார்க்கலாம். துலாம் ராசியில் பிறந்தவர்கள் 2026-ல் குரு பெயர்ச்சியடைவதால் துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். உங்களுடைய வேலையில் முன்னேற்றம் கிடைக்கும். நீண்ட கால பிரச்சனைகளுக்கு இந்த பெயர்ச்சிக்காலப்பகுதியில் முடிவு கிடைக்கும். புதிய தொழில் ஆரம்பிக்கும் எண்ணம் உள்ளவர்கள் இந்த காலப்பகுதியில் ஆரம்பிக்கலாம். வேலைச் செய்யும் இடத்தில் பதவியுயர்வு கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. கன்னி ராசியில் பிறந்தவர்கள் 2026-ல் இரண்டு முறை குரு பெயர்ச்சி நடப்பதால் புதிய வருமானங்கள் வருவது அதிகரிக்கும். நீங்கள் தொழில் செய்பவர்களாக இருந்தால் புதிய ஒப்பந்தங்களில் கையொழுப்பம் ஈடுவீர்கள். உறவுகள் ஆழமான பிணைப்பில் இருக்கும். முதலீடுகளில் லாபம் அதிகமாக கிடைக்கும். பங்குச் சந்தை, லாட்டரி போன்ற எதிர்பாராத அதிர்ஷ்டமும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. கடக ராசியில் பிறந்தவர்கள் 2026-ல் 2 முறை நடக்கும் குரு பெயர்ச்சியால் நிதி ஆதாயங்கள் இந்த காலப்பகுதியில் அதிகமாக கிடைக்கும். மகிழ்ச்சி, நல்லிணக்கம் அதிகரிக்கும். மற்றவர்கள் முன்னிலையில் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். புதிய ஆலோசனைகள் இந்த காலப்பகுதியில் உங்களை தேடி வரும். கடன் கொடுத்து கிடைக்காத பணம் இந்த காலப்பகுதியில் கிடைக்கும். ஒவ்வொரு முயற்சியும் வெற்றிக்கான முதல் படியாக மாறும்.
