மனநிலையில் கொடுக்கப் போகிறது. சிலருக்கு எதிர்பாராத மருத்துவ செலவுகள் வரலாம் அல்லது சிறிய காயங்கள் ஏற்படலாம். சுற்று வட்டாரத்தில் எதிர்பாராத எதிரிகள் உருவாகலாம். அதேபோல் பொருளாதார ரீதியாகவும் இவர்கள் சில இழப்புகளை சந்திக்க கூடலாம் என்பதால் தியானம் மேற்கொண்டு இறைவழிபாடு செய்தால் இந்த பாதிப்பில் இருந்து விலகலாம்.
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு செவ்வாய் ராகு சேர்க்கையானது இவர்களுக்கு தொழில் ரீதியாக அவர்கள் கூட்டாளியுடன் ஒரு கசப்பை உண்டு செய்ய போகிறது. தொழிலில் இவர்கள் இந்த காலகட்டம் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். உடல்நலம் மற்றும் மருத்துவ செலவுகள் இவர்கள் எதிர்பாராத விதமாக சந்திக்கலாம். பொது இடங்களில் பேசும் பொழுது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வீண் வார்த்தைகளை இவர்கள் உபயோகிப்பது தவிர்க்க வேண்டும்.
