உலகளவில் , தங்கம் விலை பெரும் உச்சத்தை தொட்டுள்ள நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் இலங்கையில், தங்கத்தின் விலை 22,000 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது .
இதன்படி, கடந்த 20 ஆம் திகதி 340,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 24 கரட் தங்கம் பவுண் ஒன்று இன்று 362,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்று 22 கரட் தங்கம் பவுண் 335,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அத்துடன், நேற்றைய நாளுடன் ஒப்பிடும் போது இன்று ஆறாயிரம் ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நேற்று 356,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட 24 கரட் தங்கம் பவுண் ஒன்று, இன்றைய நாளில் 362,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
