பெற்றோர்களே அவதானம் பிள்ளைகள். கையில் வைத்திருந்த தகட்டிலாலான அளவு நாடா மின் இணைப்பில் பட்டதால் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 7 வயது சிறுமி மாத்தறை மாவட்டத்தின் வரல்ல பகுதியை சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் இன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். மின்சாரம் தாக்கி துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தவர் ஆரம்ப பாடசாலையில் படிக்கும் ஏழு வயது மாணவியாவார். இவர் வரல்ல பகுதியில் வசித்து வந்ததுடன் சிறுமி வைத்திருந்த அளவிடும் நாடா தனது வீட்டோடு இணைக்கப்பட்டிருந்த மின்சார கம்பியின் இரண்டு கம்பிகளில் பட்டதால் மின்சாரம் தாக்கியுள்ளது. உடனடியாக மாணவி மொரவாக்கவில் உள்ள கொஸ்னில்கொட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

