யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறை தலைவர் திரு. A. நித்திலவர்மணன் அவர்களின் துணைவியார் திருமதி நிஷாந்தினி நித்திலவர்ணன் இன்று இறைவனடி சேர்ந்தார் என்ற துயரச் செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. யா/ஹாட்லி கல்லூரியின் தமிழ் ஆசிரியையாகவும், முன்னாள் கிளி/கிளிநொச்சி மத்திய கல்லூரியின் அர்ப்பணிப்பான ஆசிரியையாகவும் கல்வித்துறையில் விடாமுயற்சியுடன் பணியாற்றியவர். இன்று காலை யாழ் போதனா வைத்தியசாலையில் அவர் இயற்கை எய்தியதாகத் தெரியவந்துள்ளது. அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம். துயரில் உள்ள குடும்பத்தினருக்கு மனமார்ந்த ஆழ்ந்த அனுதாபங்கள்.
