டக்ளஸ் தேவானந்தாவிடம் பெற்ற வாக்குமூலத்தை தனிச் சிங்களத்தில் எழுதியதனால் அதில் ஒப்பமிட டக்ளஸ் மறுப்புத் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சரும், ஈ.பி.டி.பியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவின் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக அரசினால் வழங்கிய துப்பாக்களில் ஒன்று பாதாள உலக குழுவிடம் இருந்து மீட்கப்பட்டமை தொடர்பில் டகளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டு 72 மணி நேர பொலிஸ் பாநுகாப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அதாவது 2000 ஆம் ஆண்டு யூலை மாதம் 10 ஆம் திகதி டக்ளசின் பாதுகாப்பிற்காக வழங்கிய கைத் துப்பாக்கிகளில் ஒன்று மதுஸ் என்பரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் பொலிஸாரால் மீட்கப்பட்ட துப்பாக்கிளில் காணப்பட்டது. 2019இல் மறைத்து வைத்திருந்தபோது வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து எடுத்த ஆயுதங்களில் டக்கிளஸின் பொறுப்பில் இருந்த ஒர் கைத் துப்பாக்கியும. அப்போது மீட்கப்பட்டது. இவ்வாறு துப்பாக்கிகள் மீட்ட சம்பவத்தில் வாக்கு மூலம் வழங்கியவரை பொலிஸார் நீதிமன்றம் அழைத்துச் சென்றபோது 2020 ஆம. ஆண்டு இனம் தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மதுஸ் என்ற பாதாள உலக குழு உறுப்பினர் உயிரிழந்தார். இந்த விடயம் தொடர்பில் 6 ஆண்டுகளின் பின்பு தற்போது 2025-12-26 இல் விசாரணைக்கு அழைக்கப்பட்டு மாலை 5 மணிக்கு கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட டக்ளஸ் சார்பில் அரச உடமையை துஸ்பிரயோகம் செய்தமை மற்றும் ஆயுத விற்பனை உள்ளிட்ட 3 குற்றச் சாட்டுகளில் வழக்கு பாயவுள்ளது. இரு நாளாக வாக்குமூலத்தை பெற்ற புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலத்தை தனிச் சிங்களத்தில் எழுதியமையால் வாக்கு மூலப் பிரதியில் இன்று மாலை வரையில் டக்களஸ் ஓப்பமிடவில்லை எனத் தெரிய வருகின்றது. இதேநேரம் வழக்கு திங்கள் கிழமை நீதிமன்றம் வரும் என எதிர் பார்க்கப்படுவதோடு டக்ளஸ் சார்பில் சட்டத்தரணி சாளிய பீரிஸ் பிரதானமாகவும் மேலும் இரு சட்டத்தரணிகளும் ஆயராகவுள்ளனர். சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ள டக்ளசை இரு சட்டத்தரணிகள் நேரில் சென்று சந்திப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது
