தந்தையை துடிதுடிக்க கொலை செய்த-தாய்-மகன்-மகள்-வெளியான காரணம்..!

 

விழுப்புரம் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (வயது 50க்கு மேல்) என்பவரை அவரது மனைவி தீபா, மகன் புஷ்பநாதன் (17), மகள் கலைவாணி (15) ஆகிய மூவரும் சேர்ந்து கழுத்து நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஆறுமுகம் 13 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்து வந்த நிலையில், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பினார். வீட்டிற்கு வந்த பிறகு, தீபா மீது சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.


இதனால் ஆறுமுகம் அவ்வப்போது மது அருந்திவிட்டு மனைவி மற்றும் குழந்தைகளுடன் சண்டையிட்டு வந்தார். 


இந்நிலையில், கடந்த 6-ம் தேதி இரவு மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த ஆறுமுகம் உறங்கிக் கொண்டிருந்த போது, ஆத்திரமடைந்த தீபா திட்டமிட்டு, மகன் புஷ்பநாதன் (12-ம் வகுப்பு படிப்பவர்) மற்றும் மகள் கலைவாணி (10-ம் வகுப்பு படிப்பவர்) ஆகியோருடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.


பின்னர், ஆறுமுகம் இயற்கையாக இறந்துவிட்டதாக நாடகமாடியுள்ளனர். கடந்த 7-ம் தேதி ஆறுமுகம் இறந்ததாக கூறப்பட்ட நிலையில், அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் வேப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.


இதன் பேரில் போலீசார் உடலை கைப்பற்றி, விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் ஆறுமுகம் இயற்கையாக இறக்கவில்லை என்பதும், கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது உறுதியானது.


இதையடுத்து தீவிர விசாரணை நடத்திய வேப்பூர் போலீசார், தீபாவிடம் நடத்திய விசாரணையில் கொலை உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. குடும்ப தகராறு காரணமாக தீபா திட்டமிட்டு குழந்தைகளுடன் சேர்ந்து இக்கொலையை செய்தது தெரியவந்தது.


இதன்பேரில் தீபா, புஷ்பநாதன், கலைவாணி ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 


இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


Summary : In Periyanesalur village near Veppur, Villupuram district, Deepa, along with her son Pushpanathan (17) and daughter Kalaivani (15), strangled her husband Arumugam to death while he was asleep after drinking. The family initially claimed natural death, but postmortem revealed truth. Police arrested all three following investigation into family disputes.

 

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.