வென்னப்புவ, லுனுவில பகுதியில், அதிவேகத்தில் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதியதில், மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற 18 வயது மாணவர் ஒருவர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இவ் விபத்தின் போது மோட்டார்சைக்கிளும் மின்சாரத் தூணும் துண்டு துண்டாக உடைந்தது.
அதிக திறன்கொண்ட kawasaki ninja h2 என்ற மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



