நவம்பர் மாதத்திற்கான புகையிரத பாடசாலை பருவகால சீட்டைப் (Season Ticket) பயன்படுத்தி, டிசம்பர் மாதத்தில் பாடசாலை நடைபெறும் நாட்களில் ரயிலில் பயணிப்பதற்கான அனுமதியை இலங்கை ரயில்வே திணைக்களம் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கியுள்ளது.
அனர்த்தங்களினால் போக்குவரத்து சிரமங்கள் காரணமாக சில பிரதேசங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு 2025 டிசம்பர் மாதத்திற்கான பாடசாலை பருவகால சீட்டுகளைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.அதனை கருத்திற்கொண்டு குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
