சலனம் தரும் சனி-இன்றைய ராசிபலன்{31.1.2026}

 

சனிக்கிழமை, 31 ஜனவரி 2026
மேஷம்
aries-mesham
பாக்கிய விருத்தி ஏற்படும் நாள். சாதுர்யமான பேச்சால் அனைவரையும் கவர்ந்திடுவீர்கள். செல்வ நிலை சீராக உயரும். அரசால் ஆதாயங்கள் ஏற்படும். பலவகைகளில் மனைவி மனமுவந்து உதவுவாள்.
ரிஷபம்
taurus-rishibum
கவனமாகப் படித்தால் கல்வியில் தேர்ச்சி பெறலாம். வாக்குவாதங்களைத் தவிர்த்தால் இல்லத்தில் அமைதி நிலவும். காரியங்கள் கைகூட கடின உழைப்புத் தேவை.
மிதுனம்
gemini-mithunum
தனவரவும், மனத்திருப்தியும் ஏற்பட்டு மகிழும் நாள். புதிய பதவிகள், வாகனம், வசதி வாய்ப்புக்கள் என எல்லா விதத்திலும் முன்னேற்றம் ஏற்படும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும்.
கன்னி
virgo-kanni
அரசு உதவிகள், விஐபி க்களின் ஆதரவு, புதிய வேலை வாய்ப்பு, கல்வியில் தேர்ச்சி என அனுகூலமான பலன்களை எதிர்பார்க்கலாம். வாழ்க்கையில் நல்ல மாற்றங்களும் திருப்பங்களும் ஏற்படும்.
மகரம்
capricorn-magaram
எல்லா வளமும் பெறும் இனிய நாள். இனிய சுற்றுலாப் பயணங்களால் இன்பம் பெருகும். பெண்ணின் சிநேகமும், தனக்கெனத் தனிவீடும் அமையும். குடும்பத்தில் சுபகாரியக் கொண்டாட்டங்கள் நிறைவேறும்.
கடகம்
cancer-kadagam
இன்று சுமாரான நாள். வீண்வம்புக்குச் செல்லாதிருப்பது நல்லது. பெண்களால் விரயச் செலவுகள் ஏற்படும். செலவுகளைக் குறைக்க அத்தியாவசியப் பொருட்களை மட்டும் வாங்கவும்.
சிம்மம்
leo-simmam
ஆரோக்கியம் மேம்படும் அனுகூலமான நாள். தனவரவு அதிகரிக்கும், பெண்களிடம் எதிர்பார்த்த இலாபங்கள் ஏற்படும். டாக்டர்கள் கைவிட்ட கேஸ்கூட துள்ளி எழும்.
துலாம்
libra-thulam
பக்தி மயமான நாள். தெய்வபக்தியால் மனநிம்மதி கூடும். புத்திர பாக்கியம் ஏற்படும். திருவருளாலும், குருவருளாலும் வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும்.
மீனம்
pisces-meenam
இன்றைய நாள் கழிவது யுகங்கழிவது போன்றிருக்கும். தாயின் உடல் நிலையில் அதிக அக்கறை தேவை. நீர் நிலைகளில் எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம்.
தனுசு
sagittarius-thanusu
எல்லா விதத்திலும் ஏற்றம் தரும் நாள். இனிமையான, மற்றும் சாதுர்யமான பேச்சாற்றலால் காரியங்களை சாதித்திக் கொள்வீர்கள். குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். மனைவியின் கலகத்தால், உறவுக்குள் குழப்பம் உண்டாகும். அதிகாரிகளிடம் பணிவாக நடந்தால் பணியிடத்தில் சாதகமான சூழல் உருவாகும்.
கும்பம்
aquarius-kumbam
இன்று சுமாரான நாள். தங்கள் பொருட்களை கவனமுடன் பாதுகாக்க வேண்டிய நாள். பயணங்களின் போதும் எச்சரிக்கை தேவை. வியாபாரிகளுக்குத் தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிட்டாது.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post