35 வயது பெண்ணின் அந்தரங்க உறுப்பில் அதை சொருகி-இலங்கையில் நேர்ந்த கொடூரம்-வைத்தியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

 

புத்தளத்தில் வயிற்று வீக்கம் மற்றும் அதிக இரத்தப்போக்கு காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணின் கருப்பையில் இருந்து 2 கண்ணாடி போத்தல்களை மாரவில ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் நாத்தாண்டிய பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவராகும். கடந்த 9 ஆம் திகதி 1990 அம்பியுலன்ஸ் சேவையால் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அந்தப் பெண்ணுக்கு பல பரிசோதனைகள் செய்ய வைத்தியர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் அவரை ஸ்கேன் செய்ய பரிந்துரைத்த பிறகு, பெண்ணின் வயிற்றில் இரண்டு போத்தல்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து நடந்த அறுவை சிகிச்சையின் போது இரண்டு போத்தல்களை அகற்ற வைத்தியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இது தொடர்பாக நோயாளியை விசாரித்த போது, ​​அவர் தேங்காய் சார்ந்த உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரிவதாகவும், ஜனவரி முதலாம் திகதி நிறுவனத்தின் உரிமையாளரின் வீட்டில் ஒரு விருந்து நடைபெற்றதாகவும் கூறினார். விருந்தின் போது, ​​நிறுவனத்தில் பணிபுரியும் இரண்டு நபர்களுடன் மது அருந்தியதாகவும், குடிபோதையில் இருந்தபோது, ​​அவர்கள் மீண்டும் மீண்டும் தன்னை துஷ்பிரயோகம் செய்ததாகவும், பின்னர் இரண்டு போத்தல்களை அவரது அந்தரங்க உறுப்புகளில் செருகியதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த சில நாட்களாக ஏற்பட்ட நோய்க்காக தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், தனது உடல்நிலை மோசமடைந்ததால் அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். நத்தாண்டிய-வலஹாபிட்டிய மற்றும் பனங்கொட பகுதிகளைச் சேர்ந்த 51 மற்றும் 56 வயதுடைய இருவரையும், அந்த நிறுவனத்தின் உரிமையாளர் எனக் கூறப்படும் 47 வயதுடைய பெண்ணையும் மாரவில பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்கள் மூவரையும் மாரவில நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய பின்னர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post