4 லட்சத்தை தொட்ட தங்கம்-அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்

 

இன்று (28) உலக தங்க விலை 5,250 டொலர்கள் வரை அதிகரித்துள்ளது.  இதற்கமைய, கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் இன்று காலை வெளியான புதிய தரவுகளின்படி, தங்கத்தின் விலையில் மொத்தமாக 10,000 ரூபா அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 

 அதன்படி, இன்றைய தினம் "22 கரட்" தங்கப் பவுன் ஒன்றின் விலை 374,600 ரூபாவாகப் பதிவாகியுள்ளது. 

 இதேவேளை, நேற்று 394,000 ரூபாவாகக் காணப்பட்ட "24 கரட்" தங்கப் பவுன் ஒன்றின் விலை, இன்று 405,000 ரூபா வரை அதிகரித்துள்ளதாகக் கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.