Type Here to Get Search Results !

50000 ரூபா கொடுப்பனவு தொடர்பில் சற்று முன் வெளியான அறிவிப்பு

 

டித்வா சூறாவளியின் பின்னர் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மீள்குடியேற்றவும், இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கவும் அரசாங்கம் வழங்கும் இழப்பீட்டுத் தொகையை முறையான முகாமைத்துவத்துடன் அந்த மக்களுக்கு வழங்கும் பணிகள் தற்போது வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டு வருகிறது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, டித்வா சூறாவளியின் பின்னர் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மீள்குடியேற்றத்திற்காக சமையலறை உபகரணங்கள் கொள்வனவிற்கு அரசாங்கம் வழங்கும் 50000 ரூபா கொடுப்பனவில் தற்போது 70% வழங்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளது. 25 மாவட்டங்களில் மொத்தம் 156805 குடும்பங்கள் இந்தக் கொடுப்பனவுக்காக கணக்கிடப்பட்டதுடன், அவற்றில் 109512 குடும்பங்களுக்கு இதுவரை குறித்த தொகை வழங்கப்பட்டுள்ளது.


நுவரெலியாவில் 1,191 குடும்பங்கள் இந்த உதவித்தொகையைப் பெற தகுதி பெற்றிருந்ததுடன், அந்த அனைத்து குடும்பங்களுக்கும் உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Bottom Post Ad