"காதலுக்கு வயதில்லை" என்பதை மெய்ப்பிக்கும் வகையில் கேரளாவில் 60 வயதான ஜெயபிரகாஷ் மற்றும் ரஷ்மி ஆகியோரது திருமணம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இருவரும் இளம் வயதிலேயே காதலித்த போதிலும், பெற்றோரின் வற்புறுத்தலால் வெவ்வேறு நபர்களை திருமணம் செய்துகொண்டனர். பல ஆண்டுகளுக்கு பிறகு, இருவரது துணைகளும் மறைந்த நிலையில், ரஷ்மி நடித்த ஒரு குறும்படத்தை பார்த்த ஜெயபிரகாஷ், மீண்டும் அவரிடம் பேச தொடங்கினார். இதையடுத்து, இருவரின் பிள்ளைகளும் சம்மதம் தெரிவிக்க, இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது.
