யாழ்ப்பாணம் வடமராட்சி கடற் பரப்புகளில் பலமான காற்று வீசி வருகின்றது. வங்காள விரிகுடாவில் உருவான தாளமுக்கத்தின் காரணமாக வடமராட்சி கடற்பரப்புகளில் அதிக காற்று வீசி வருகின்றது.அனர்த்த முன்னாயத்த நடவடிக்கைகளாக கடற்றொழிலாளர்கள் தங்களுடைய மீன்பிடி உபகரணங்கள் மற்றும் படகுகளை பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தியுள்ளனர்.பலமான காற்று வீசி வருவதாலும் கடல் கொந்தளிப்பாக காணப்படுவதாலும் சுற்றுலா வாசிகள் மற்றும் கடற்றொழிலாளர்கள் மறு அறிவித்தல் வரை கடற்கரை பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
