மழை மற்றும் காற்றினால் மின் தடை ஏற்படும், மக்கள் தங்களை தயார்படுத்தவும் – மட்டு அரசாங்க அதிபர் வங்காள விரிகுடாவின் தென்கிழக்காக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால், கிழக்கு மாகாணத்தில் பல பகுதிகளில், இன்று 8ம் திகதி தொடக்கம் எதிர்வரும் 10 ம் திகதிவரை அதிகளவிலான மழையுடன் பலத்த காற்று வீசும், எனவே மின்தடை ஏற்பட கூடிய வாய்ப்பு ஏற்படும், இதனை கொண்டு மக்கள் தயார்படுத்துமாறு, மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார் சீரற்ற காலநிலை தொடர்பாக அரசாங்க அதிபர் இன்று வியாழக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் வளிமண்டல திணைக்களத்தின் ஏதிர்வு கூறலின் பிரகாரம், வங்காள விரிகுடாவின் தென்கிழக்காக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் இன்று 8ம் திகதி வியாழக்கிழமை தொடக்கம் எதிர்வரும் 10 ம் திகதி வரையான சனிக்கிழமை வரையில் 100 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது
