திடீரென பயணித்த ஆட்டோவை மனைவி பிள்ளையுடன் கொழுத்திய கணவன்-தப்பி ஓடிய பிள்ளை-சிக்கிய மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்{படங்கள்}

 குடும்ப தகராறு காரணமாக தனது மனைவி பிள்ளைகள்  பயணித்த முச்சக்கரவண்டியை தீவைத்து எரித்த இராணுவ வீரர். மனைவிக்கு பலத்த காயம்

கிராதுருக்கோட்டை, ஹோபாரியாவின் மகாவேலி கிராமப் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 

தீப்பிடிப்பில் காயமடைந்த பெண் அருகிலுள்ள கால்வாயில் குதித்து உடலின் தீயை அணைக்க முயன்ற நிலையில் உள்ளூர்வாசிகள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் அந்தப் பெண்ணுக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிரதுருக்கோட்டை ஹோபாரியா ஜெயந்திபுர பகுதியைச் சேர்ந்த 36 வயது பெண் ஒருவர் சம்பவத்தில் காயமடைந்தார்.

சம்பவத்தில் பின் இருக்கையில் இருந்த 14 வயது மகன் முச்க்கரவண்டியிலிருந்து குதித்து தப்பியுள்ளார்

குடும்பத்தினர் பயணித்த முச்சக்கரவண்டியை தீவைத்து எரித்த  இராணுவ வீரர் கிரதுருக்கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

அவர் பலாலி இராணுவ முகாமில் பணியாற்றும் 43 வயதுடைய நபர் என தெரிவிக்கப்படுகிறது






இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post