வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த வட்டாவுக்குள் புகுந்த மோட்டார்சைக்கிள்- ஒருவர் உயிரிழப்பு
A9 வீதியின் கொக்காவில் பகுதியில் இன்று வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த பட்டாவின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிளை செலுத்திவந்த நபர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
உயிரிழந்தவர் யாழ்/துன்னாலையை பிறப்பிடமாகவும் வவுனியா குருமன்காடு பிள்ளையார் கோவில் முன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் சின்னத்துரை பரமேஸ்வரன் என்று தெரிவிக்கப்படுகிறது



