இலங்கையின் புதிய வாகன இலக்க தகடுகளை தயாரிப்பதற்கான நீண்ட காலமாக தாமதமடைந்து வந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் வாரத்தில் சவுத் ஏசியன் டெக்னோலோஜிஸ் (South Asian Technologies) நிறுவனத்திற்கு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (10) இடம்பெற்ற சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
தற்போது நிலுவையிலுள்ள இலக்கத் தகடுகளின் எண்ணிக்கை 2 இலட்சத்தையும் (200,000) தாண்டியுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை அங்கீகாரம் ஏற்கனவே பெறப்பட்டுள்ள போதிலும், ஒப்பந்தம் இன்னும் உத்தியோகப்பூர்வமாக இறுதி செய்யப்படவில்லை. எனினும், அதன் பணிகள் தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது.
