சீன அரசாங்கத்தால் பாடசாலை மாணவர்களுக்கான சீருடைத் துணிகள் நன்கொடை
சீன அரசாங்கத்தால் பாடசாலை மாணவர்களுக்காக நன்கொடையாக வழங்கப்படும் சீருடைத்துணிகளை, இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ ஜெங் ஹாங், நேற்று (13) கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரியவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார். இந்நிகழ்வு கொழும்பு துறைமுகத்தின் சர்வதேச கொள்கலன் முனையத்தில் இடம்பெற்றது.
