வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் ராஜாவாக கருதப்படுபவர். சூரியன் பிப்ரவரி 06 ஆம் திகதி நட்சத்திரத்தை மாற்றவுள்ளார். இந்த நட்சத்திர பெயர்ச்சியின் போது சூரியன் விசாகம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார்.

இப்போது சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் பிப்ரவரியில் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.

மேஷம்
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் காண்பார்கள். பல புதிய வழிகளில் இருந்து பணம் தேடி வரும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். நிதி நிலைமை வலுவடையும். பேச்சால் பல வேலைகளை திறம்பட முடிப்பீர்கள். புத்திசாலித்தனமாகவும், நிதானமாகவும் யோசித்து செயல்படுவதோடு முடிவுகளை எடுத்தால், நல்ல நிதி நன்மைகளைப் பெறலாம். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சிம்மம்
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். குறிப்பாக தைரியமும், வீரமும் அதிகரிக்கும். கடந்த கால பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். மன அமைதி கிடைக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். முதலீடுகளில் இருந்து எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். இது வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் உருவாகும். சூரியனின் அருளால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

கும்பம்
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். புதிய வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்பு கிடைக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.