அரச பேருந்துடன் டிப்பர் மோதி விபத்திற்குள்ளானதில் சாரதிகள் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்துச் சம்பவம் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட A-9 பிரதான வீதியில் இன்று இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த அரச பேருந்துடன் முறிகண்டி பகுதியில் இருந்து மணல் ஏற்றிக்கொண்டு யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த டிப்பரும் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
டிப்பர் சாரதியின் நித்திரை கலக்கம் காரணமாகவே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தில் அரச பேருந்தின் சாரதி மற்றும் பயணிகள் இருவர், டிப்பர் சாரதி உட்பட நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
