Type Here to Get Search Results !

மார்ச் 12 முதல் அதிகளவு சமையல் எரிவாயு சந்தைக்கு

 


எதிர்வரும் மார்ச் மாதம் 12ஆம் திகதி முதல் சந்தைக்கு அதிகளவிலான லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க எதிர்பார்ப்பதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். 

எவ்வாறாயினும், கடந்த சில நாட்களைப் போலவே இன்றும் நாட்டின் பல பகுதிகளில் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதைக் காணக்கூடியதாக இருந்தது. லிட்ரோ மற்றும் லாப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாகப் பல பகுதிகளில் நுகர்வோர் விசனம் தெரிவித்ததுடன், எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசைகளில் காத்திருப்பதையும் காணமுடிந்தது. ஆயினும், தேவையான கையிருப்பைப் பேணுவதற்காக புதிய கொள்வனவு கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய பெப்ரவரி மாதம் முடிவதற்குள் மூன்று எரிவாயு கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில், இன்று காலை சில பகுதிகளுக்கு புதிய எரிவாயு கையிருப்புகள் கிடைக்கப்பெற்றிருந்தாலும், இன்னும் பல பகுதிகளுக்கு லிட்ரோ எரிவாயு கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், பல இடங்களில் லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடும் தொடர்கின்றது. இதேவேளை, பெப்ரவரி 26ஆம் திகதி முதல் லாஃப்ஸ் எரிவாயுவை சந்தைக்கு விநியோகிக்கவுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Bottom Post Ad

AD