Type Here to Get Search Results !

ரமலான் ஸ்பெஷல்: இஃப்தார் நேரத்து 'இன்ஸ்டன்ட்' எனர்ஜி... இந்த 5 சர்பத் ரெசிபிகளை வீட்டிலேயே செய்யலாம்

 

பாதாம் பால் ஸ்மூத்தி : பாதாமில் மெக்னீசியம், வைட்டமின் ஈ மற்றும் நார்ச்சத்து உள்ளது, அதே நேரத்தில் பாலில் கால்சியம் உள்ளது. எனவே, நீண்ட நேரம் நோன்பிற்கு பிறகு, இதை குடிப்பதுநம் உடலுக்கு உடனடி சக்தியை வழங்குகிறது.

தர்பூசணி, புதினா ஜூஸ்: வெயிலால் தாகம் எடுக்கும் போது, தர்பூசணி ஜூஸ் போதும். இதில் புதினா சேர்த்தால், உடல் சூட்டை தணிக்க மட்டும் , ஜீரண சக்தியையும் கூட்டும். நோன்பு முடிந்ததும், உணவை எளிதில் ஜீரணிக்கவும் இது உதவும்.

ஸ்ட்ராபெரி மற்றும் தயிர் ஸ்மூத்தி : ஸ்ட்ராபெர்ரிகளில் வைட்டமின் சி நிறைந்துள்ளது மற்றும் தயிரில் ப்ரீபயாடிக்குகள் உள்ளன. எனவே இந்த ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்புச் சக்தி நிறைந்த சர்பத் நமது குடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

இஞ்சி + எலுமிச்சை ஜூஸ்: நோயெதிர்ப்பு சக்தி!நோன்பு இருந்ததால் ஏற்படும் தலைசுற்றல், மந்த நிலை ஆகியவற்றை குறைக்கும். உடலில் இன்சுலின் சரிவர இயங்க, ரத்தத்தில் சர்க்கரை அளவை சமப்படுத்த எலுமிச்சை -இஞ்சி காறு கலந்து குடிப்பது சிறந்தது.

வெள்ளரிக்காய் சர்பத: வெள்ளரிக்காய், 95% நீர்ச்சத்து கொண்டது. இதை சர்பத் செய்து குடித்தால், உடலிலிருக்கும் நச்சுத்தன்மை வெளியேறி, நீர்ச்சத்து சமநிலையில் இருக்கும். கூடவே துளசி இலையை சேர்த்தால், இது அதிகம் புத்துணர்வாக இருக்கும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Bottom Post Ad

AD