செவ்வாயுடன் இணையும் ராகு-ஆட்டம் காணப்போகும் ராசிகள்

 

வேத ஜோதிடத்தில் ராகு நிழல் கிரகமாக அறியப்படுகிறார். இந்த கிரகம் மாறும் ஒவ்வொரு முறையும், 12 ராசிகளின் வாழ்க்கையையும் பாதிக்கிறது. தற்போது ராகு கும்ப ராசியில் இருக்கிறார். ஏற்கனவே இந்த ராசியில் சுக்கிரன், புதன், சூரியன் உள்ளனர். பிப்ரவரி 23 அன்று செவ்வாயும் இந்த ராசிக்குள் நுழைகிறார். இதனால், ராகுவுடன் செவ்வாய் இணைந்து அங்காரக யோகத்தை உருவாக்குகின்றனர். இது ஒரு அசுப சேர்க்கையாக கருதப்படுகிறது. இதன் காரணமாக, மூன்று ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பிரச்சனைகள் வர உள்ளது. அந்த ராசிகள் எவை என்று பார்ப்போம். இந்த அங்காரக யோகம் மேஷ ராசிக்கு சாதகமற்ற சூழலை உருவாக்கும். இந்த நேரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். தொழிலிலும், உறவுகளிலும் எதிர்பாராத பாதிப்புகள் வரலாம். நீங்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் தோல்வியை தரக்கூடும். எனவே ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைப்பது நல்லது. அங்காரக யோகம் விருச்சிக ராசிக்கு எச்சரிக்கை மணி ஒலிக்கிறது. இந்த நேரத்தில் மன நிம்மதி சீர்குலையலாம். மகிழ்ச்சி குறையும். குடும்பத்தில் பிரச்சனைகள் வரலாம். கோபத்தையும் பேச்சையும் கட்டுப்படுத்தவும். நிதி சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் நம்பிக்கைக்குரியவர்களே உங்களுக்கு எதிராக திரும்பக் கூடும். உடல்நலத்திலும் கவனத்துடன் இருக்க வேண்டும். பொறுமை அவசியம். கும்ப ராசியில் இந்த அங்காரக யோகம் உருவாவதால் எதிர்பாராத சிக்கல்கள் உருவாகும். இந்த நேரத்தில் உங்கள் குணம் ஆக்ரோஷமாக மாறும். அகங்காரம் அதிகரிக்கும். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவும். நிதி மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் வரக்கூடும். நிதி சார்ந்த நெருக்கடிகள் உருவாகலாம். திட்டமிட்ட பணிகளை முடிக்க முடியாமல் போகலாம். எந்த சூழ்நிலையிலும் பொறுமையையும், புரிதலையும் கைவிடக்கூடாது.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post