கறிவேப்பிலையால் வந்த வினை- சற்று முன் தாயும் மகளும் துடிதுடித்து பலி-இலங்கையை உலுக்கிய சோகம்

கலகா, நவனெலிய கிரிபோகஹின்ன பகுதியில் மின்சாரம் தாக்கியதில் தாயும் மகளும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (07) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்கள் 46 வயதுடைய தாயும் 13 வயதுடைய மகளும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். கருவேப்பிலை மரத்தில் கருவேப்பிலை பறித்துக்கொண்டிருந்த போது, தரையில் விழுந்து கிடந்த மின்சாரக் கம்பியில் சிக்கியதால் மின்சாரம் தாக்கி இந்த மரணங்கள் சம்பவித்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் கலகா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Related Post
Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post