சண்டிலிப்பாயிலிருந்து உடுவில் செல்லும் டச்சு வீதியில் இன்று (07) தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக் கட்ட விசாரணைகளில், உயிரிழந்தவர் “பியூச்சர் லைஃப்” என்ற நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
