Type Here to Get Search Results !

பிரித்தானியாவில் கொலை செய்யப்பட்ட இலங்கை பெண் வெளியான அதிர்ச்சி பின்னணி

 

பிரித்தானியாவின் வேல்ஸ் நகரில் தனது மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்த இலங்கையருக்கு நேற்றைய தினம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் திசர வேரகல என்பவர் தனது மனைவி நிரோதா நிவுன்ஹெல்லவை கத்தியால் குத்திக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த நிலையில் அவர் குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்ட நிலையில் நேற்றைய தினம் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. 2020ஆம் திருமணம் செய்த இந்த தம்பதி உயர்கல்விக்காகப் பிரித்தானியா சென்ற நிலையில் குடும்பத் தகராறு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில், மனைவி வேறொருவருடன் பழகியதே கொலைக்குக் காரணமாகியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலையின் பின்னர் லொறி ஒன்றின் முன் பாய்ந்து திசர உயிரை மாய்க்க முயன்றுள்ளார். எனினும் காயங்களுடன் தப்பிய அவரைப் பொலிஸார் கைது செய்தனர். குற்றவாளி தனது ஆயுள் தண்டனையில் குறைந்தது 23 ஆண்டுகள் மற்றும் 9 மாதங்களை சிறையில் கழிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Bottom Post Ad

AD