Type Here to Get Search Results !

கோழிப் பிரியர்களுக்கு சற்று முன் வெளியான அதிர்ச்சி அறிவிப்பு

 

பல்வேறு காரணங்களால் பண்ணைகளில் உயிரிழந்த கோழிகளை மனித நுகர்வுக்காக விற்பனை செய்த வியாபார நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது. ஆணமடுவ பொதுச் சுகாதாரப் பரிசோதகர் தலைமையிலான குழுவினர் குறித்த வியாபார நிலையத்தை முற்றுகையிட்டுள்ளதுடன், இதன்போது மனித நுகர்விற்கு பொருந்தாத 75 கிலோகிராம் இறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளது. உயிரிழந்த கோழிகளை விலங்கு உணவுக்காக எடுத்துச் செல்வதாக கூறிவிட்டு, அவற்றை மனித நுகர்வுக்காக விற்பனை செய்து வந்த வர்த்தகர், விநியோகஸ்தர் மற்றும் இந்த மோசடியுடன் தொடர்புடைய மற்றொருவர் என மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இந்த சுற்றிவளைப்பை ஆணமடுவ பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சிசில் சாமர ஹேமச்சந்திர உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்டிருந்தனர். இந்த நிலையில் கோழியிறைச்சி உண்பவர்கள் இறைச்சியை கொள்வனவு செய்யும் போது அவதானமாக இருக்க வேண்டுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Bottom Post Ad