Type Here to Get Search Results !

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!

 

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கான e-BMD திட்டத்தினை அறிமுகப்படுத்திய முதல் ஆண்டில் 8027 பேர் பயனடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் அரச சேவைகளை டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் தங்கள் பிறப்பு, திருமண மற்றும் இறப்புச் சான்றிதழ்களைப் பெறுவதற்கு அறிமுகப்படுத்தப்பட்ட e-BMD கட்டமைப்பு, தற்போது 62 தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களில் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்ட முதல் ஆண்டில் 8,027 நபர்கள் நேரடியாக பயனடைந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அரச சேவைகளை மக்களுக்கு நெருக்கமாகக்கும் ஜனாதிபதியின் கருத்தியலுக்கு இணங்க, e-BMD திட்டம் 2025 ஜனவரி 06 ஆம் திகதி ஜனாதிபதி செயலகம் மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயற்பாட்டின் 07 நாடுகளில் ஒரு முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் இந்த சேவை 2025 பெப்ரவரி 07ஆம் திகதி முதல் 62 வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. இந்நிலையில் வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு நடவடிக்கைகளுக்குத் தேவையான சான்றிதழ்களைப் பெறுவதில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு இந்தத் திட்டம் பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Bottom Post Ad