சற்றுமுன் மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

 

இலங்கைக்கு வடகிழக்கே மத்திய வங்கக் கடல் பகுதியில் பயணிக்கும் மீனவர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினர் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (24) பிற்பகல் 2.00 மணியளவில் எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு வடகிழக்கே மத்திய வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்த பிரதேசம் கிழக்கு நோக்கி நகர்ந்து, அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் மேலும் வலுவிழக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது

இந்தத் தொகுதியின் தாக்கம் காரணமாக, வரைபடத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள கடல் பகுதிகளில் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதுடன், மணிக்கு 50 - 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் .

அத்துடன் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும்என்பதால் கடல்சார் சமூகத்தினர் அவதானத்துடன் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post