பெரும் துயரை ஏற்படுத்திய இளம் ஆசிரியையின் மரணம்

 

நேற்று மாலை பண்டாரவளையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் , சென் தோமஸ் கல்லூரியின் ஆங்கில பாட ஆசிரியரும் பல்கலை ஆற்றல்மிக்க படைப்பாளியுமான செல்வி சண்முகவேல் பிரஷாந்தி , உயிரிழந்தார்.

ஆசிரியர் சண்முகவேல் பிரஷாந்தி, கலை இலக்கிய ஆர்வமிக்க ஒருவராக திகழ்ந்தவராவர் . இசையமைப்பில் அதீத ஆர்வத்தோடு புத்தாக்கமிக்கவராக புதிய படைப்புகளை உருவாக்க கூடியவர், இந்திய முன்னணி இசையமைப்பாளர்கள் கங்கை அமரன், தீனா , ஆகியோரது பாராட்டையும் பெற்றவர் ,

அன்மையில் நாட்டில் ஏற்பட்ட ' தித்வா' புயலினால் ஏற்பட்ட அனர்த்தத்தினால் நாட்டையும் மக்களையும் மீளெழுச்சி பெரும் நோக்கில் தனது தனிப்பட்ட முயற்சியில் உருவாக்கிய "Rebuild Sri Lanka " எனும் ஆங்கிலம் ,சிங்களம் ,தமிழ் , என மும்மொழியில் தானே பாடி இசையமைத்து பாடல் ஒன்றினையும் இவர் வெளியிட்டார்.

 இந்நிலையில் தீராத இசை ஆர்வமிக்க படைப்பாளியாகவும் ஆங்கில ஆசிரியராகவும் திகழ்ந்த செல்வி சண்முகவேல் பிரஷாந்தினியின் இழப்பு, மலையக கல்வி சமூகத்திற்கு பேரிழப்பு என பலரும் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post