இலங்கையில் இன்று (05.02.2026) தங்கத்தின் விலையில் சிறிய மாற்றங்கள் பதிவாகியுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று 24 கரட் தங்கத்தின் விலை மாற்றமின்றி நிலையாகக் காணப்படும் நிலையில், 22 கரட் தங்கத்தின் விலை ஒரு பவுணுக்கு 1,900 ரூபாவால் அதிகரித்துள்ளது.
ஆபரணத் தங்கத்திற்கான தேவை மற்றும் சர்வதேச சந்தை நிலவரம் காரணமாக 22 கரட் தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.தற்போதைய நிலவரப்படி ஒரு பவுண் 22 கரட் தங்கம் 356,100 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதுடன் 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 385,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,125 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,513 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து மாற்றமடைந்து வருவதால், எதிர்வரும் நாட்களில் உள்நாட்டுச் சந்தையிலும் விலையில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக நகையக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
